சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த மாட்டோம் : வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் அதிரடி

திங்கள், 22 ஆகஸ்ட் 2016 (14:30 IST)
வாழ்வுரிமை கட்சியை சேர்ந்தவர்கள் இனிமேல், தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த மாட்டோம் என்று வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.


 

 
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன் இதுபற்றி கருத்து தெரிவித்த போது “தமிழகத்தில்  உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்று வாழ்வுரிமை கட்சி சார்பில் பல போராட்டங்கள் நடத்தினோம். ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள், இனிமேல், சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்த மாட்டார்கள். 
 
சுங்கச்சாவடிகளுக்கு எதிராக குஜராத், மகாராஷ்டிரா மக்கள் போராடினார்கள். எனவே, அங்கு அரசே சுங்க வரியை செலுத்துகிறது” என்று அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்