மேட்டூரில் வீரப்பனின் நினைவு தினம் கொண்டாட நீதிமன்றம் அனுமதி

புதன், 14 அக்டோபர் 2015 (00:06 IST)
மேட்டூரில் சந்த கடத்தல் வீரப்பன் நினை தினத்கை கொண்டாட அவரது மனைவி முத்துலட்சுமிக்கு சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
 

 
தமிழகம் மற்றும் அருகில் உள்ள மாநில காடுகளில் சந்தன மரங்களை வெட்டி கடத்திய வழக்கில் போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் சந்தன கடத்தல் வீரப்பன். இவரை பல வருடமாக போலீசார் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், கடந்த 2004ம் ஆண்டு போலீசாரால் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
 
வீரப்பனின் 11ம் ஆண்டு நினைவு நாள் வரும் 18 ம் தேதி கடைபிடிக்கிறது. இதனையடுத்து, வீரப்பன் சமாதி உள்ள மேட்டூரில் அன்னதானம் நிகழ்ச்சி நடத்தவும், வீரப்பனின் கட் அவுட் வைக்கவும் அவரது மனைவி முத்துலட்சுமி காவல் நிலையத்தில் அனுமதி கேட்டார். ஆனால், போலீசார் அதற்கு அனுமதி மறுத்துவிட்டனர்.
 
இதனையடுத்து, வீரப்பன் சமாதி உள்ள மேட்டூரில் அன்னதானம் நிகழ்ச்சி நடத்தவும், வீரப்பனின் கட் அவுட் வைக்கவும் அவரது மனைவி முத்துலட்சுமி சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், மனுதாரர் தனது கணவரின் நினைவு நாளை முன்னிட்டு, அன்னதானம் செய்யவும், பேனர் வைக்கவும் போலீசார் அனுமதிக்கலாம் என  உத்தரவிட்டார். இதனையடுத்து மேட்டூரில் விரப்பன் விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்