அஇஅதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வமான நாளேடான ’டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.’ பத்திரிக்கையில் 10 பல்கலைக்கழகத்தை சேர்ந்த துணைவேந்தர்களும், அண்ணா பல்கலைகழகத்தின் பதிவாளரும் சசிகலாவை சந்தித்தது போன்ற செய்தியை பிரசுரித்து, புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.
இது குறித்து கல்வியாளரும், மாற்றத்திற்கான இந்தியா அமைப்பின் இயக்குநருமான நாராயணன் கூறுகையில், சசிகலாவை தலைமை நிறுவனங்களை சேர்ந்த கல்வியாளர்கள் சந்தித்தது மிகவும் அதிர்ச்சியானது என்றும் வெட்ககரமானது என்றும் கூறியுள்ளார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டை சசிகலாவை சந்தித்தவர்களுல் ஒருவரும், சமீபத்தில் ஓய்வுபெற்ற டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியின் துணைவேந்தருமான வணங்காமுடி மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் இந்து பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில், ”இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. ஆனால், மாநிலத்தில் நிலவும் அரசியல் ஸ்திரதன்மை குறித்தும் பேசப்பட்டது. மேலும், இந்த சந்திப்பு வழக்கமான இரங்கல் நிமித்தமான சந்திப்பு” என்றும் கூறியுள்ளார்.