இன்று மதிய நேரத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மதுரை மாவட்ட செயலாளர் அரசமுத்துப்பாண்டியன் மற்றும் மேலூர் தொகுதி செயலாளர் அய்யாவு ஆகியோர் தலைமையில், 500-க்கும் மேற்பட்ட கட்சி ஆதரவாளர்கள், பெண்கள் உட்பட, டோல்கேட்டை முற்றுகையிட்டு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
அவர்கள் "மதுரை மாவட்ட கலெக்டர் எங்கள் கட்சியின் கூட்டங்களை தடை செய்கிறார், கொடியேற்ற விழாவுக்கு இடையூறு செய்கிறார்" என குற்றம்சாட்டி, அவரை உடனே மாற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தினர்.
தகவல் கிடைத்ததும் மேலூர் டிஎஸ்பி சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சிவசக்தி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி ஆகியோர் அந்த இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு, போராட்டக்காரர்கள் தங்களது முற்றுகையை நிறுத்தினர்.