தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. தேர்தல் களமும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் வசந்த குமார் பணக்கார வேட்பாளராக அறியப்படுகிறார்.
வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளர்கள் தங்கள் சொத்து விபரம் அடங்கிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் வசந்த குமார் பணக்கார வேட்பாளராக உள்ளார்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் சார்பில் நான்குனேரி தொகுதியில் போட்டியிடுகிறார் வசந்த குமார். இவர் தன்னுடையை சொத்து மதிப்பை 332.27 என குறிப்பிட்டு முதல் இடத்தை பெற்றுள்ளார்.
வசந்த் & கோ புகழ் வசந்த குமாருக்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா ஆவார். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு 118 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது.