வசந்தகுமாரை நீக்க இளங்கோவனுக்கு அதிகாரம் இல்லை: பாயும் பாலையா

செவ்வாய், 24 நவம்பர் 2015 (22:25 IST)
தமிழக வர்த்தக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து வசந்தகுமாரை பதவி நீக்கும் அதிகாரம், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு இல்லை என எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.
 

 
தமிழக வர்த்தக காங்கிரஸ் தலைவர் வசந்தகுமாரை அப்பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதில், திரவியம் என்பவர் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
 
இதற்கு, குமரி மாவட்ட வர்த்தக காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பாலையா செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக வர்த்தக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து வசந்தகுமாரை பதவி நீக்கும் அதிகாரம், தமிழக காங்கிரஸ் தலைவர்  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு இல்லை என்றார். மேலும்,  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை குமரி மாவட்டத்துக்குள் இனி உள்ளே அனுமதிக்கமாட்டோம்.அதையும் மீறி அவர் வந்தால் அவருக்கு எதிராக போராட்டம் வெடிக்கும் என்று வெடித்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்