வர்தா புயல்: சென்னையை பிரிச்சு மேயும் கனமழையுடன் கூடிய பலத்த காற்று!

திங்கள், 12 டிசம்பர் 2016 (08:26 IST)
வர்தா புயல் தீவிரமடைந்துள்ளதால் சென்னை மற்றும் வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. தேசிய, மாநில மீட்புகுழுவினர் தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. முப்படை தேவைகள் பயன்படும் போது பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 
 
அதிகாலை முதலே சென்னையில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. வர்தா புயல் கரையைக் கடக்கும் போது 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வட மாவட்டங்களில் இன்று மதியத்திற்கு பின்னர் மிக கனமழை பெய்யும்.
 
இதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூரில் பழவேற்காட்டில் பலத்த கடற்காற்று வீசுவதால் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
 
இந்த வர்தா புயல் சென்னையில் இருந்து 180 கி.மீ. தொலைவில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த புயல் கரையை கடந்த 12 மணி நேரத்தில் திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். புயல் பாதிப்பை கண்காணிக்க சென்னையில் மண்டலம் வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்