மதனின் மனைவிகளிடமும் குடுமிப்பிடி சண்டை போட்ட வர்ஷா - போலீஸ் நிலையத்தில் பரபரப்பு

வியாழன், 24 நவம்பர் 2016 (13:51 IST)
கடிதம் எழுதி விட்டு தலைமறைவாகிப் போன வேந்தர் மூவிஸ் மதன், திருப்பூரில் வர்ஷா என்ற பெண்ணின் வீட்டில் பதுங்கியிருந்த போது போலீசாரிடம் கடந்த திங்கட்கிழமை சிக்கினார்.


 

 
மதனுக்கு ஏற்கனவே சிந்துஜா, சுமலதா என்ற 2 மனைவிகள் உண்டு. இதில் சுமலாதாவின் உறவினர்தான் வர்ஷா. சுமலதாவின் மகனின் பிறந்த நாள் விழாவிற்கு வர்ஷா வந்த போதுதான், அவருக்கு மதனின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
 
திருப்பூரில் வர்ஷாவுடன் மதன் பதுங்கியிருந்த போது, மோதிரம் மாற்றி அவரை திருமணம் செய்ததாகவும், கோவாவிற்கு இருவரும் தேனிலவு சென்று வந்ததாகவும் தகவல் வெளியானது. 


 

 
இந்நிலையில், தற்போது மதனை கைது செய்துள்ள போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவரது மனைவியிடம் கையெழுத்து வாங்க வேண்டியிருந்தது. 
 
அப்போது, மதனின் 2 மனைவிகளுக்கு அருகில் வர்ஷா சென்று அமர்ந்துள்ளார். மேலும், மதன் தன்னை மோதிரம் மாற்றி திருமணம் செய்துள்ளார். எனவே நானும் அவரின் மனைவிதான் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிந்துஜாவும், சுமலதாவும், வர்ஷாவிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.


 

 
இதனால் என்ன செய்வதென்று திகைத்த போலீசார், ஒரு வழியாக அவர்களை சமாதனம் செய்ததுடன், முதல் மனைவி சிந்துஜாவிடம் கையெழுத்து பெற்றுள்ளனர்.
 
போலீசாரின் முன்னிலையிலேயே 2 மனைவிகள் மற்றும் வர்ஷா ஆகியோர் சண்டை போட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

வெப்துனியாவைப் படிக்கவும்