ஆளுனரை கிண்டி இல்லத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும்: வன்னி அரசு

புதன், 20 ஏப்ரல் 2022 (13:18 IST)
ஆளுநரை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் வன்னி அரசு கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
 
இதுகுறித்து வன்னிஅரசு மேலும் கூறியபோது ’தமிழ்நாடு ஆளுநர் இல்லம் 166 ஏக்கர் 84 செண்ட் கொண்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் நடைபெறும் சட்டப்பேரவை வளாகத்தை விட பல மடங்கு அதிகம்.
 
ஒரே நபர் அல்லது அவர் சார்ந்த குடும்பத்தினர் இந்த இல்லத்தில் வசித்து வருகின்றனர். இது மக்களாட்சிக்கு எதிரானதாது. எனவே ஆளுநரை கிண்டியில் உள்ள ஆளுநர் இல்லத்தில் இருந்து வெளியேற்றி பாதுகாப்பான வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இதற்கான சிறப்பு சட்டத்தை நடப்பு கூட்டத்தொடரிலேயே அரசு இயற்ற வேண்டும் என வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்