முதல்வர் நலமுடன் வீடு திரும்புவார் : அப்பல்லோ சென்ற வைகோ பேட்டி

சனி, 8 அக்டோபர் 2016 (12:24 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா, பூரண நலத்துடன் விரைவில் வீடு திரும்புவார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார். 


 

 
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலத்தை தெரிந்து கொள்வதற்காக, வைகோ இன்று காலை அப்பல்லோ மருத்துவமனை சென்றார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
 
“முதல்வர் ஜெயலலிதா நலமாக இருக்கிறார். அவருக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  அவருக்கு சிகிச்சை அளிக்கும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் குழுவை சந்தித்து பேசினேன். அதிமுக தொண்டர்களின் கவலை விரைவில் நீங்கும். முதல்வர் பூரண நலத்துடன் வீடு திரும்புவார்” என்று கருத்து கூறினார்.
 
ரெமோ வீடியோ திரைவிமர்சனத்திற்கு இங்கே கிளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்