கடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சந்தித்த பின்னடைவுக்கு, மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோவே காரணம் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
வருகிற உள்ளாட்சி தேர்தலில், பாஜக தனித்து போட்டியிடும். அதேபோல், வருகிற பொங்கல் திருநாளில், கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடைபெறும். மக்களவை மழைக்காலக் கூட்டத்தொடரில் ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும்.