குறுந்தொழில்களை நசுக்குகிறது மத்திய அரசு - வைகோ

செவ்வாய், 5 மே 2015 (19:23 IST)
குறுந்தொழில்களை நசுக்க மத்திய அரசு முயற்சிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
 
பாஜக ஆட்சியில் சிறு, குறுந்தொழில்கள் முழுவதுமாக நலிவடைந்து, லட்சக்கணக்கான மக்களின் வேலை வாய்ப்பையும் வாழ்வாதாரத்தையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஊறுகாய், ரொட்டி, மெழுகுவர்த்திகள், சலவை உப்பு, தீப்பெட்டி, பட்டாசு, ஊதுபத்தி, கண்ணாடி வளையல், மரச்சாமான்கள், நாற்காலி, அலமாரி, அலுமனியப் பொருள்கள், நோட்டுப் புத்தகங்கள் ஆகியவை உள்ளிட்ட 20 பொருள்களை சிறு தொழில்கள் பட்டியலில் மத்திய அரசு நீக்கி உத்தரவிட்டுள்ளது.
 
இதனை உணர்ந்து, சிறு தொழில்கள் பட்டியலில் இருந்து 20 பொருள்களை நீக்கும் ஆணையை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்