வைகோ கொடும்பாவி எரிப்பு

வியாழன், 7 ஏப்ரல் 2016 (01:15 IST)
திமுக தலைவர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக கூறி வைகோ கொடும்பாவியை எரித்தனர்.
 

 
திமுக தலைவர் கருணாநிதி குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவதூறாக பேசினார். பின்பு, அவரே மன்னிப்பு கோரினார்.
 
இந்த நிலையில், தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து திமுக நகர செயலர் இலங்கேஸ்வரன் தலைமையில், ஊர்வலமாகச் சென்ற திமுக வினர், பேருந்து நிலையம் முன்பு வைகோ வின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதுபோல, திமுக தலைவர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக கூறி வைகோ கொடும்பாவியை தமிழகம் முழுக்க எரித்து வருகின்றனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்