சுகாதாரமற்ற உணவு... திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி கடைக்கு சிக்கல்?

ஞாயிறு, 26 ஜூலை 2015 (13:21 IST)
திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி கடையில் சாப்பிட்ட ஒருவருக்கு ஃபுட் பாய்சன் ஆனது குறித்து விசாரணை மேற்கொண்ட சுகாதாராத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
 

 
திண்டுக்கல்லை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரின் சகோதரர்தான் பாதிக்கப்பட்ட நபராவார். பிரியாணி சாப்பிட்டு பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கு சிகிச்சை பெற்றுள்ளார்.
 
வயிற்று வந்தது எப்படி என்று சந்தேகம் அடைந்த கார்த்திக்கேயன், மீண்டும் ஒரு பிரியாணியை பார்சல் வாங்கி அதை பரிசோதனை ஆய்வுக்கூடத்தில் கொடுத்து சோதனை செய்துள்ளார். அதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது.
 
பாதிக்கப்பட்டவரின் புகாரின் பேரில் திண்டுக்கல் சுகாதராத்துறை அதிகாரிகள் திண்டுக்கல் நகரில் உள்ள தலப்பாக்கட்டி கடையில் சோதனை செய்தனர். அதில் இறைச்சி, மீன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் சரியாக பராமரிக்காமல் காய்கறிகளுடன் போட்டு வைத்துள்ளனர்.
 
அதோடு உணவு சமைக்கும் இடமும் சுகாதரமற்ற முறையில் இருந்தது பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். முதல்நாள் சமைத்த உணவையும் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் தலப்பாகட்டி பிரியாணி கடைக்கு நோட்டீஸ் அளித்துள்ளனர்.
 
மேலும், இறைச்சி பொருட்களை நீண்ட நாட்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்காமல் உடனடியாக சமைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்