உலகை மாற்றியவர்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்திய தமிழர்

வியாழன், 9 ஜூன் 2016 (22:07 IST)
உலகை மாற்றியவர்கள் பட்டியலை டைம் இதழ் வெளியிட்டது. அதில் இந்தியாவைச் சேர்ந்த உமேஷ் சச்தேவ் என்ற தமிழர் இடம்பெற்றார்.


 

 
தங்களது புதிய படைப்புகள் மூலம் உலகை மாற்றியவர்கள் என்று இந்த ஆண்டுக்கான பட்டியலை டைம் இதழ் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில், தொலைபேசியில் ஒரு முனையில் பேசுபவர் எந்த மொழியில் பேசினாலும், அதனை மறுமுனையில் கேட்பவரால் புரிந்து கொள்ளும் வகையில் மாற்றும் மென்பொருளை கண்டுபிடித்த இந்திய தமிழரான உமேஷ் சச்தேவ் இடம்பெற்றார்.
 
30 வயதான இந்திய மென்பொருள் நிபுணர் உமேஷ் சச்தேவ், அவசரகால உதவி மையங்களுக்கு தொடர்பு கொள்ளும் மக்கள், தங்களது உள்ளூர் மொழியில் பேசுவதை, தொலைபேசியின் மறுமுனையில் கேட்பவர் புரிந்து கொள்ளும் வகையில் மாற்றும் மென்பொருளை அறிமுகம் செய்த சாதனைக்காக இடம்பெற்றார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்