உடுமலை கொலை சம்பவம்: குற்றவாளிகள் 4 பேர் கைது

செவ்வாய், 15 மார்ச் 2016 (13:11 IST)
உடுமலையில் காதல் திருமணம் செய்த சங்கர் படுகொலை சம்பவத்தில் 4 பேரை போலீஸார் கைது செய்யப்பட்டனர்.


 

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கம் கிராமத்தைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சங்கர். இவர், திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த கௌசல்யா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டுள்ளார். இதனையடுத்து, சங்கர் நேற்று ஞாயிற்றுக்கிழமை உடுமலை மத்திய பேருந்து நிலையம் எதிரில் உள்ள வணிக வளாகத்தில் 3 பேர் கொண்ட கும்பலால் சராமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதலில், படுகாயமடைந்த அவரது மனைவி கவுசல்யா வெட்டுக்காயத்துடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலை சம்பவம் அருகிலிருந்த கேமராவில் பதிவாகியது. அதில் கொலையாளிகள் பைக்கில் வந்து சங்கரை வெட்டிவிட்டு எவ்வித பதட்டமுமின்றி இரு சக்கர வாகனத்தில் செல்லும் காட்சி பதிவாகியது.

இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் பழனியை சேர்ந்த மணிகண்டன், மதன், செல்வகுமார், ஜெகதீசன் ஆகியோர் இந்த கொலையை செய்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை போலீஸார் கைது செய்து தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விசாரணையில் பிடிபட்ட மணிகண்டன், மதன், செல்வகுமார், ஜெகதீசன் ஆகியோர் கௌசல்யாவின் தந்தைக்கு நண்பர்கள் என்பதும் தெரியவந்தது. விசாரணை இவர்கள் கூறும்போது, கௌசல்யாவின் தந்தை தனது மகள் ஏமாற்றிவிட்டு காதல் திருமணம் செய்துவிட்டாளே என்று புலம்பி வந்தார். இதனால் அவருக்கு உதவி செய்யும் நோக்கில் கௌசல்யாவை அழைத்து வரச் சென்றோம். ஆனால் அவர் வர மறுத்ததால் ஆத்திரமடைந்த நாங்கள் அவர்களை வெட்டினோம் என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த கொலை சம்ப்[அவத்தில் மேலும் யாருக்காவது தொடர்புள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசார்ணை நடத்திவருகின்றனர். இந்த கொலை தொடர்பாக கவுசல்யாவின் தந்தை சின்னசாமி நேற்று நிலக்கோட்டை  நீதிமன்றத்தில் சரண் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்