கூவத்தூர் வழியா புது ரூட்டு... ஈபிஎஸ்-ஐ வாரிவிட்ட உதயநிதி!!

செவ்வாய், 9 ஜூன் 2020 (11:43 IST)
திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்துள்ளார். 
 
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை வரும் 15 ஆம் தேதி நடத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்தத் தேர்வை நடத்த வேண்டாம் என எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மட்டுமன்றி சென்னை உயர்நீதிமன்றமும் கருத்துக் கூறியது. 
 
இது குறித்த வழக்கு நடைபெற்ற போது சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. 
 
இந்நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானாவில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் இன்றி அனைத்து மாணவர்களும் பாஸ் என்று அறிவிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு இல்லை என்பது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது.
 
இதனை சுட்டிக்காட்டி திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கே அவர்களின் வலி, வேதனையை உணரமுடியும் என்பதற்கு தெலங்கான முதல்வர் இரு உதாரணம். 
 
ஆனால் காலைப் பிடிப்பதுதான் கோட்டைக்கான வழி என கூவத்தூர் வழியாக புது ரூட் பிடித்தவர்களுக்கெல்லாம் அவற்றை உணரமுடியாது என்பதற்கு தமிழக முதல்வர் ஒரு சான்று என பதிவிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்