கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? உதயநிதிக்கு டபுள் ஆஃபர்!!

வெள்ளி, 12 மார்ச் 2021 (13:02 IST)
திமுக இளைஞர் அணி செயளாலர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டி. 

 
தேர்தல் பரப்புரையில் பிஸியாக இருந்த உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி ஆகிய இரு தொகுதியில் விருப்ப மனுக்களை அளித்தார். திமுகவுக்கு செல்வாக்கு மிகுந்த தொகுதியாக கருதப்படுகிறது இந்த தொகுதிகள்.
 
இந்நிலையில், திமுக வேட்பாளர் பட்டியலை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தற்போது அறிவித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில், திமுக இளைஞர் அணி செயளாலர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டி என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
திமுக இளைஞர் அணி செயளாலர் கட்சி பதவிக்கு வந்த ஓராண்டுக்குள் முதல் தேர்தலில் இரண்டு தொகுதியில் போட்டியிடுகிறார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்