ஓடும் பேருந்தில் இருவர் வெட்டிக் கொலை : திருநெல்வேலியில் பயங்கரம்
செவ்வாய், 12 ஜூலை 2016 (13:20 IST)
திருநெல்வேலி மாவட்டம், விரவநல்லூரில் ஓடும் பேருந்தில் இருவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீரவநல்லூரில் பயணிகள் பேருந்து ஒன்ரு சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரெனெ அந்த பேருந்தில் இருந்த இரு பயணிகளை சில மர்ம நபர்கள் சராமரியாக வெட்டி கொலை செய்தனர். இதைக் கண்ட பயணிகள் அலறினர். அதன் பின் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த போலீசார், அவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
பட்டப்பகலில், ஓடும் பேருந்தில் இருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.