மத்தியக்குழுவை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு

திங்கள், 30 நவம்பர் 2015 (18:33 IST)
தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யாமல் புறக்கணித்த மத்தியக் குழுவை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.


 

 
தூத்துக்குடியில் கனமழை காரணமாக அப்பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அங்கு ஆயிரத்து 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல் மற்றும் வாழை தோட்டங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. மேலும்,12 லட்சம் வாழைகள் முற்றிலும் அழுகிய நிலையில் இருக்கிறது. எனவே பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சேதங்கள் குறித்து மத்தியக் குழுவினர் முறையான கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
 
கடலூர், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த மத்திய குழுவினர் தூத்துக்குடி மாவட்டத்தை புறக்கணித்து உள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து போராட்ட நடத்த தூத்துக்குடிவிவசாயிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்