இந்நிலையில் இதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு அம்மா உணவகத்திலிருந்து புரட்சித்தலைவி அம்மா அவர்களின் படம் திமுகவினரால் அகற்றப்பட்டது கண்டனத்திற்குரியது. அடிக்கடி இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்வது சரியானதல்ல.