பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி சத்தியநாராயணன், சபாநாயகரின் முடிவில் தவறு இல்லை மற்றும் தகுதி நீக்கம் சட்டவிரோதமானது அல்ல எனக்கூறினார். மேலும், 18 எம்.ஏல்.ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்ததோடு, 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பு தினகரன் மற்றும் 18 எம்.எல்.ஏக்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தினகரன் “இது ஒரு அனுபவம்தான். அடுத்து என்ன செய்வதென்று எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை செய்து முடிவெடுப்பேன். இடைத்தேர்தலை சந்திப்பதா அல்லது உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதா என பேசி முடிவெடுப்போம்” என தெரிவித்தார்.