டிடிவி தினகரனுடன் செந்தில், குண்டுகல்யாணம், குப்புசாமி ஆலோசனை

திங்கள், 6 மார்ச் 2017 (22:37 IST)
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவால் துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்ட டிடிவி தினகரன் இன்று அதிமுக நிர்வாகிகளுடன் தனித்தனியே மற்றும் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்





 



அந்த வகையில் நடிகர்கள் செந்தில், குண்டுகல்யாணம், நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, அ.தி.மு.க நட்சத்திரப் பேச்சாளர் அனிதா குப்புசாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.கே.ரிதீஷ், கட்சியின் செய்தித் தொடர்புக் குழு உறுப்பினர் கௌரி சங்கரன், அரியலூர் மாவட்டச் செயலாளரும், அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் இன்று கட்சியின் துணைப் பொதுச் செயலாளர், டி.டி.வி.தினகரனை நேரில் சந்தித்து கட்சிப் பணிகள் குறித்து ஆலோசனை பெற்றனர்.

விரைவில் நட்சத்திர பேச்சாளர்கள் அனைவரும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தமிழக அரசுக்கும், சசிகலாவுக்கும் ஆதரவாக பொதுக்கூட்டங்களை நடத்துவார்கள் என்று அதிமுக தரப்பில் இருந்து செய்தி வெளிவந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்