சசிகலாவுக்கு விஷயமே தெரியாதாம்... சம்பவம் பண்ண காத்திருக்கும் தினகரன்?

Webdunia
வியாழன், 12 டிசம்பர் 2019 (15:02 IST)
சசிகலாவுக்கு கட்சி பதிவு குறித்து தினகரன் சொல்லாமல் இருப்பது கட்சியினருக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
முன்னதாக அமமுக கட்சியை பதிவு செய்யும் பணி நடந்துகொண்டிருப்பதால், வேலூர் நாடாளுமன்ற தேர்தலிலும், விக்கிரவாண்டி நாங்குநேரி இடைத்தேர்தலிலும் அக்கட்சி போட்டியிடவில்லை.   
 
இந்நிலையில் தற்போது அமமுக கட்சியாக பதிவு செய்யப்பட்டுவிட்டது. உள்ளாட்சி தேர்தலிலும் அமமுக போட்டியிட உள்ளது. இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது, தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் ஒரே சின்னத்தில் அமமுக போட்டியிடும். ஒரே சின்னத்தை ஒதுக்க கோரி நீதிமன்றத்தை நாடுவோம். எங்களுக்கு நீதி தேவதை துணை இருக்கிறார் என பேசினார்.   
 
ஆனால், தற்போது உள்ளாட்சித் தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு தனிச்சின்னம் வழங்க மாநில தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டதாக அமமுக பொருளாளர் வெற்றிவேல் பேட்டி அளித்துள்ளார். இதனைத்தொடந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது...  
 
கட்சியாக பதிவாகியும் கூட அமமுகவை தேர்தல் ஆணையம் நிராகரிக்கிறது.  ஆளுங்கட்சி இன்னல்கள் தந்தும் அமமுகவை கட்சியாக பதிவு செய்ததில் மிகவும் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளதையடுத்து கிடைத்த வரைக்கும் போதும் என தினகரன் இருக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 
 
ஆனால், தற்போது கட்சிக்குள் உருவாகியுள்ள சர்ச்சை என்னெவெனில் சிறையில் இருக்கும் சசிகலாவிடம் அனைத்து விஷயங்களையும் கூறிவிடும் தினகரன் இன்னும் கட்சி பதிவானதை கூறவில்லை என்பதுதானாம். கடந்த முறை தினகரன் சசிகலாவை பார்க்க சென்ற போது அவர் அவரை பார்க்காமல் திரும்பி வந்தார். 
 
எனவே இந்த முறையும் அதே அவமானத்தை சந்திக்காமல் இருக்க இன்னும் கட்சி பதிவு குறித்து சொல்லாமல் இருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கலாம் என கட்சியினர் முணுமுணுக்க துவங்கியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்