அந்நிலையில், தினகரனுக்கு புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டது. அதாவது, கொங்கு முன்னேற்ற கழகம், தேசிய மக்கள் சக்தி, எழுச்சி தமிழர்கள் முன்னேற்ற கழகம் ஆகிய மூன்று கட்சிகளும் தங்களுக்கு தொப்பி சின்னம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு சின்னத்தை ஒதுக்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துவிட்டது.
எனவே, தொப்பி சின்னம் வேண்டும் என்ற தினகரனின் கோரிக்கையை தேர்தல் அதிகாரி நிராகரித்தார். மேலும் தொப்பி சின்னம் கொங்கு முன்னேற்ற கழக வேட்பாளருக்கு வழங்கப்பட்டது. அதோடு, தினகரன் கோரியிருந்த தொப்பி, விசில், கிரிக்கெட் மட்டை ஆகிய மூன்று சின்னமும் மற்றவர்களுக்கு வழங்கப்பட்டதால், டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.