நாங்கள் மொத்தம் 40 பேர்; ஓபன் செய்த தங்க தமிழ்செல்வன்

செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (17:38 IST)
அதிமுகவின் ஸ்லீப்பர் செல்கள் உள்பட 40 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தினகரனுக்கு உள்ளது என தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார். 


 

 
புதுச்சேரி தனியார் சொகுசு விடுதியில் தினகரன் ஆதரவாளர்கள் 21 எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ளனர். அதில் ஒருவரான தங்க தமிழ்செல்வன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் அவர் கூறியதாவது:-
 
அதிமுக பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் சசிகலாவுக்கு மட்டுமே உண்டு. அதிமுக பொதுக்குழு விரைவில் கூட்டப்படும். முதல்வர் பழனிச்சாமி விரைவில் மாற்றப்படுவார். இதுதொடர்பாக ஜனாதிபதியை 2 நாட்களில் நாங்கள் சந்திக்க உள்ளோம். டிடிவி தினகரனுக்கு ஸ்லீப்பர் செல்கள் உட்பட மொத்தம் 40 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருக்கிறது என்றார்.
 
நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 40க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கலந்துக் கொள்ளவில்லை என தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருக்கும் விடுதியில் 20 அறைகள் புக் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. 
 
இந்நிலையில் தற்போது தங்க தமிழ்செல்வன், தினகரனுக்கு 40 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதை தெளிவுப்படுத்தியுள்ளார்.  

வெப்துனியாவைப் படிக்கவும்