குத்தாட்டத்திற்கு குட்பை சொன்ன திருநங்கைகள்

திங்கள், 4 மே 2015 (15:55 IST)
விழுப்புரத்தில் நடைபெற்ற உலக திருநங்கைகள் கலந்து  கொண்ட விழாவில் பரத நாட்டியம், அம்மன் ஆட்டம், கரகாட்டம் போன்ற பாரம்பரிய நடனங்களை ஆடி பார்வையாளர்களை அசத்தினர்.
 
விழுப்புரத்தில் , கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு விழுப்புரத்தில், தமிழகம் மட்டுமின்றி மும்பை, கல்கத்தா, டெல்லி மற்றும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்காண திருநங்கைகள் குவிந்துள்ளனர். 
 
அங்கு, இவர்களுக்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதில் கடந்த காலத்தில், திருநங்கைகள் கவர்ச்சி ஆட்டம், குத்தாட்டம் போன்றவற்றை ஆடினர். இந்த ஆட்டத்தை காண இளைஞர்கள் கூட்டம் அலைமோதும்.
 
ஆனால், கால சக்கரம் மாற்றத்திற்கு திருநங்கைகளும் தப்பில்லை. அவர்கள் தங்களையும் கால சக்கரத்தில் இணைத்துக் கொண்டனர். அதன் காரணமாக, குத்தாட்டங்களுக்கு குட் பை சொல்லி, இந்தியாவின் பாரம்பரிய நடனங்களான பரத நாட்டியம், கரகாட்டம், அம்மன் ஆட்டம், மோகினி ஆட்டம், சிலம்பாட்டம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி பார்வையாளர்களை அசத்தினர்.  
 
இந் நிகழ்ச்சியில், மாளவிகாவின் வரவேற்பு நடனம், சினேகிதி குழுவினரின் அம்மன் ஆட்டம், வேலூர் ஜோதி, ஜானகி ஆகியோரின் பாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்ததாக கூறப்படுகின்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்