வேலூர் மாவட்டமத்தில் உள்ள புளியங்கண்ணு கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.தமிழ்ச்செல்வி. திருநங்கையான இவர் 2017-2018 ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வில் 74 சதவீத மதிப்பெண் பெற்றார். இதையடுத்து, அவர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் படிப்பில் சேர விண்ணப்பித்தார். ஆனால் திருநங்கை என்ற காரணத்தினால் அவருக்கு சீட் கொடுக்காமல் மருத்துவமனை நிர்வாகம் அலைக்கழித்தது.