சவாலே சமாளி: ஆர்.கே. நகரில் வேட்புமனுவை தாக்கல் செய்தார் டிராபிக் ராமசாமி

வியாழன், 4 ஜூன் 2015 (13:34 IST)
ஆர்.கே. நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலில், சமுக சேவகர் டிராபிக் ராமசாமி வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
 
சென்னை, ஆர்.கே. நகர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பிர் வெற்றிவேல் தனது பதவியை கடந்த மாதம் 17 ஆம் தேதி ராஜினாமா செய்தார். இதனையடுத்து, அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முயற்சி மேற்கொண்டது.
 
அதன் பயனாக, வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று (ஜூன் 5ஆம் தேதி) முதல் தொடங்கியது.
 
இந்நிலையில், தண்டையார்ப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி 4 வது மண்டல அலுவலகத்தில், மண்டல அதிகாரியான கே.சவுரிராஜனிடம், தேர்தல் மன்னன் கே. பத்மராஜன் சுயேட்சை வேட்பாளராக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
 
இதனையடுத்து. சமுக சேகவர் டிராபிக் ராமசாமி, சுயேட்சை வேட்பாளர் எம். அகமது ஷாஜகான், இந்திய குடியரசு கட்சி ( அம்பேத்கர்) வேட்பாளர் ரவி, இந்திய மக்கள் கட்சி (மதச்சார்பற்றது) வேட்பாளர் ஆர். ஆபிரகாம் ராஜாமோகன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
 
ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்