தடையை மீறி நாளை போராட்டம்: இஸ்லாமிய அமைப்பு அறிவிப்பால் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (21:03 IST)
மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த 4 நாட்களாக சென்னையில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இஸ்லாமிய அமைப்பினர் நடத்திவரும் இந்த போராட்டத்தை முறியடிக்க காவல்துறை மற்றும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகள் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நாளை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என ஏற்கனவே இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளன. ஆனால் இது குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் தலைமைச் செயலகத்தில் மார்ச் 11ஆம் தேதி வரை போராட்டம் நடத்த சென்னை நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
 
இந்த நிலையில் தடையை மீறி நாளை குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திட்டமிட்டபடி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் என இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து நாளை தலைமைச் செயலகத்தில் வழக்கத்தைவிட அதிகமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாகவும் போராட்டம் நடத்த வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்