உச்சத்தை தொட்ட தக்காளி விலை.. கிலோ 80 ரூபாய்! – அதிர்ச்சியில் மக்கள்!

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (12:40 IST)
மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளதால் விலை இருமடங்கு உயர்ந்துள்ள சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த பல நாட்களாகவே மழை தொடர்ந்து வரும் நிலைய்ல் சந்தைகளில் தக்காளி வரத்து குறைந்துள்ளது. தக்காளி வரத்து குறைவாக இருக்கும் நிலையில் தேவை அதிகமாக உள்ளதால் விலை ஏற்றம் கண்டுள்ளது.

கடந்த வாரத்தில் கிலோ ரூ.35 விற்று வந்த தக்காளி விலை உயர்வால் ரூ.60 ஆக விற்பனை ஆகி வந்தது. இந்நிலையில் இந்த வாரம் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.80க்கு விற்பனையாகி வருகிறது. இந்த திடீர் விலையேற்றம் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்