இந்த நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்காவுள்ளது. இன்று தொடங்கும் தமிழக சட்டசபை வரும் ஜூலை 9ம் தேதி வரை 23 நாட்கள் நடைபெறவுள்ளது. இன்று காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் நடைபெறும் என்றும் அதன் பின்னர் துறை வாரியான மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இன்றைய கூட்டத்தில் வனம் மற்றும் சுற்றுச்சூழல், தகவல் தொழில் நுட்பவியல் துறை மீதான மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் இன்று தமிழக சட்டசபை கூட்டத்தில் கருப்புச்சட்டை அணிந்து கலந்து கொள்ளவிருப்பதாக கூறியுள்ள திமுக எம்.எல்.ஏக்கள் தூத்துகுடி துப்பாக்கி சம்பவம் குறித்து கேள்வி எழுப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவினர் கேள்வி எழுப்ப ஒருவேளை சபாநாயகர் அனுமதிக்காவிட்டால், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், சட்டசாபையை முடக்க முயற்சிக்க வாய்ப்புண்டு என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 1,000க்கும் மேற்பட்ட போலீசார் சட்டசபை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.