தமிழகத்தில் மேலும் 72 பேர்களுக்கு கொரோனா: சென்னையில் மட்டும் 52 பேர்

Webdunia
வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (18:23 IST)
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்று முன் 72 பேர்கள் இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் மொத்தம் 1755 பேர்களுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் சென்னையில் இதுவரை 400 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மட்டும் 52 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் மொத்தம் 452 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இன்று இருவர் கொரோனாவால் உயிரிழந்ததை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 114 பேர் குணமாகி உள்ளதாகவும் இதனை அடுத்து 866 பேர் கொரோனா நோயிலிருந்து குணம் ஆகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்