புதுச்சேரி மாநிலத்தில் பெரும்பாலான கடைகள் அடைப்பு: என்ன காரணம்?

Mahendran

புதன், 18 செப்டம்பர் 2024 (10:29 IST)
மின் கட்டண உயர்வைக் கண்டித்து, இந்தியா கூட்டணி சார்பில் புதுச்சேரியில் முழு அடைப்பு நடத்தப்பட்டு வருவதால் புதுச்சேரி மாநிலத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன என செய்தி வெளியாகியுள்ளது.

இன்றைய முழு அடைப்பு காரணமாக புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கவில்லை என்றும், மின்கட்டண உயர்வை முழுவதுமாக ரத்து செய்ய வலியுறுத்தி இந்த கடையடைப்பு போராட்டம் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் டிஜிட்டல் மின் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் என இந்தியா கூட்டணி கோரிக்கை விடுத்து வருகிறது. அதேபோல் மின்துறையை தனியார் மயமாக்கவும் இந்தியா கூட்டணி எதிர்ப்பு தெரிவித்து இந்த கடையடைப்பு போராட்டத்தை நடத்துகிறது.

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அறிவிப்பு வெளியான போது கண்டு கொள்ளாமல் இருந்த இந்தியா கூட்டணி தற்போது அண்டை மாநிலமான புதுச்சேரியில் மட்டும் மின் கட்டண உயர்வுக்கு கடையடைப்பு போராட்டம் நடத்துவது முற்றிலும் முரண்பாடாக இருக்கிறது என்று இந்தியா கூட்டணி கட்சியினருக்கு அரசியல் விமர்சனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்