சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பா?

வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (07:40 IST)
சென்னையில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பது பொது மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சி அடைந்ததற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படவில்லை என்ற அதிருப்தி பொது மக்கள் மனதில் இருந்து வருகிறது 
 
இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளதை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பெட்ரோல் டீசல் விலையை கச்சா எண்ணெயின் வீழ்ச்சிக்கு ஏற்ப குறைக்க வேண்டும் என்றும் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என்றும் தொடர்ந்து பொதுமக்களால் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்