பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?

திங்கள், 15 நவம்பர் 2021 (07:13 IST)
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் 9 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில் இன்றும் மாற்றம் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
 
தொடர்ந்து பத்தாவது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருப்பது பொதுமக்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தை தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் இன்று பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 101.40 எனவும், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு 91.43 ரூபாய் எனவும் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்