பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி! – எப்படி விண்ணப்பிப்பது?

ஞாயிறு, 4 ஜூன் 2023 (09:25 IST)
தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வு விண்ணப்பங்கள் அளிக்கும் தேதி இன்றுடன் முடிவடைகிறது.தமிழ்நாடு அரசு மாநில பாடத்திட்டம் மற்றும் சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பட்ட படிப்பிற்காக மாணவர்கள் ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் அடுத்ததாக பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது. இந்த கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி ஆகும். பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.tneaonline.org/ என்ற இணையதளம் மூலம் தங்கள் விவரங்களை பதிவிட்டு கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்