சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆன்லைன் மூலம் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்றே கடைசி நாள் என்று தெரிவித்தார். பெயர் மாற்றம், முகவரி மாற்றம் செய்ய, ஆன்லைனில் இன்று இரவு 12 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றார்.