இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 117 மையங்களில் குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. அதனால் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ தேர்வின் போது, காலை 8:30 மணிக்கு தேர்வர்கள் வர வேண்டும் என்றும், தேர்வு நேரத்தில் சோதனை செய்வதற்காக 6,400 குழுக்கள்,333 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மேலும் குரூப் 2 தேர்வு முடிவுகள் வரும் ஜூன் மாதம் இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளது எனவும், ஒரு பணியிடத்திற்கு 10 பேர் என்ற அளவில் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் என்றும், எதிர்காலத்தில் பயோமெட்ரிக் தேர்வில் பயோமெட்ரில் முறை கொண்டு வரப்படும் எனத் தெரிவித்தார்.