ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்காது: முதல்வர் பழனிச்சாமி

புதன், 1 மார்ச் 2017 (15:45 IST)
நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


 

 
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 14 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடைப்பெற்று வருகிறது. இன்று நெடுவாசல் போராட்டக் குழுவினர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினர்.
 
நெடுவாசல் கிராமத்தில் செயல்படுத்தப்படவுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை மத்திய அரசு கைவிட வேண்டுமென தமிழ்நாடு அரசு வலியுறுத்துமாறு கோரிக்கை மனுவினை அளித்தனர். இவர்களிடம் பேசிய முதல்வர் பழனிச்சாமி கூறியதாவது:-
 
நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு மாநில அரசு அனுமதி வழங்காது. நெடுவாசலில் நடைப்பெற்று வரும் போராட்டத்தை கிராம மக்கள் கைவிட வேண்டும். கண்டிப்பாக இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்காது. ஆய்வு நிலையில் தான் நெடுவாசலின் ஹைட்ரோ கார்பன் திட்டம் இருக்கிறது. 
 
விவசாயிகள் பாதிப்படையக் கூடிய எந்தத் திட்டமானாலும், அதனை ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது, என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்