கிரானைட் முறைகேடு: சகாயம் தலைமையிலான விசாரணை குழுவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு

செவ்வாய், 16 செப்டம்பர் 2014 (20:43 IST)
கிரானைட் மற்றும் கனிம மணல் முறைகேடு தொடர்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை நடத்த, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
 
தமிழகத்தில் கிரானைட் மற்றும் கனிம மணல் முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை நடத்த குழு ஒன்றை அண்மையில் அமைத்து உத்தரவிட்டது.
 
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது.
 
அதில், கிரானைட் மற்றும் கனிம மணல் முறைகேடு உள்ளிட்டவை பற்றி ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும், புதிய விசாரணையால் தேவையின்றி விவகாரம் நீடித்துக் கொண்டே செல்லும் என்றும், இதனால் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்