நேற்று தமிழகத்தில் 3,509 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 70,977 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக பாதிப்பு 3000ஐ தாண்டியுள்ளது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 3,509 பேர்களில் 1,834 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 47,650 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், ஜூன் 29 மருத்துவ குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அமலில் உள்ள பொதுமுடக்கம் ஜூன் 30 ஆம் தேதியுடன் முடியும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மீண்டும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார்.