தமிழக சட்டசபை தேர்தல்!. வாக்குப்பதிவு நிறைவு!.. கரூரில் அதிக வாக்குப்பதிவு!..

வியாழன், 23 ஏப்ரல் 2026 (18:18 IST)
தமிழக சட்டசபைக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தமிழகத்தில் தொடங்கியது. 234 தொகுதிகளிலும் சேர்த்து சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் களத்தில் நின்றார்கள். பொதுமக்கள் வாக்களிப்பதற்கக சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது.

காலை 7:00 மணி முதலே வாக்களிக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினார்கள். இதனை தொடர்ந்து மாலை 3 மணி அளவிலேயே 70 சதவீத வாக்குகள் பதிவாகிவிட்டது. இது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்தது. மேலும், மாலை 5 மணி நிலவரப்படி 82.24 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. அதன்பின் மேலும் ஒரு மணி நேரம் இருப்பதால் எப்படியும் மொத்த வாக்கு சதவீதம் 90ஐ நெருங்கிவிடும் என கணிக்கப்படுகிறது. இந்நிலையில், மாலை 6 மணியோடு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

அதேநேரம், மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தற்போது வாக்குப்பதிவு முடிவுக்கு வந்திருப்பதால் மின்னணு வாக்கு எந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகளில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அதன்பின், வாக்கு எந்திரங்கள் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4ம் தேதி சீல் மீண்டும் உடைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சட்டமன்ற தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி கரூரில் 89 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியிருக்கிறது. குறைந்தபட்சமாக கன்னியாகுமாரியில் 76 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கிறது. முழுமையான வாக்கு சதவீதம் இரவுக்குள் தெரிந்துவிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்