இந்நிலையில், அக் கட்சியின் நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், பி.எஸ்.ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ் மூத்த துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவராக என்.எஸ்.சி.விசித்தனும், தேர்தல் உயர்மட்டக் குழு தலைவராக பாரமலையும், தேர்தல் முறையீட்டுக்குழு தலைவராக வேலுவும் நியமிக்கப்பட்டனர்.
மேலும், சி.ஞானசேகரன், கோவை தங்கம் உள்பட 9 பேர் துணைத் தலைவர்களாகவும், ராம்பாபு, விஸ்வநாதன் உள்ளிட்ட 20 பேர் பொதுச்செயலாளர்களாகவும், 32 பேர் செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இளைஞரணி மாநிலத்தலைவராக யுவராஜா நியமிக்கப்டப்பட்டுள்ளார்.