திருவண்ணாமலை கோயிலில் மாயமான சிலைகள்

செவ்வாய், 10 ஜூலை 2018 (17:39 IST)
திருவண்னாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள 2 சிலைகள் காணாமல் போனது தொடர்பாக கோயிலின் இணை ஆணையர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

 
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் கொண்டாடப்படும் ஆனி பிரம்மோற்சவம் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைமுன்னிட்டு கோயிலில் சிலைகள் கணக்கெடுக்கும் பணி இணை ஆணையர் ஞானசேகரன் தலைமையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், 2 பித்தளை சிலைகள் காணவில்லை என்று கோவிலின் இணை ஆணையர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ஒன்றேகால் அடி உயரம் கொண்ட தண்டாயுதபாணி சிலையும், முக்கால் அடி உயரம் கொண்ட பித்தளை சூளமும் காணவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். 
 
இந்த புகார் தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்