அப்படி செய்யுறது உயிருக்கே ஆபத்துமா..! – ரயிலில் சாகசம் செய்த மாணவிக்கு எஸ்.பி அட்வைஸ்!

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (09:03 IST)
சென்னையில் ஓடும் ரயிலில் ஆபத்தான வகையில் சாகசம் செய்த பள்ளி மாணவன் மற்றும் மாணவியை சிறப்பு காவல் ஆய்வாளர் நேரில் அழைத்து அறிவுரை வழங்கியுள்ளார்.

ரயில்களில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் ஓடும் ரயிலில் சாகசம் செய்வதாக ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இதனால் சில சமயம் உயிரிழப்புகளும் ஏற்படும் நிலையில் மாணவர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபடக்கூடாது என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் சென்னை அருகே கவரப்பட்டில் பள்ளி மாணவருடன் மாணவி ஒருவரும் சேர்ந்து ஓடும் மின்சார ரயிலில் ஆபத்தான சாகச செயல்களை மேற்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலானது. இதை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த திருவள்ளூர் எஸ்.பி வருண் குமார் மாணவன் மற்றும் மாணவியையும், அவர்களது பெற்றோர்களையும் நேரில் அழைத்து அறிவுறை வழங்கியுள்ளார். மேலும் அப்போது அந்த மாணவன் டி.எஸ்.பி ஆக விரும்புவதாகவும், மாணவி ஐபிஎஸ் அதிகாரி ஆக விரும்புவதாகவும் தெரிவித்ததாக வருண்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்