வடிவேலு காமெடி பார்த்தது குத்தமா?: பெண்ணை தாக்கி காதை செவிடாக்கிய டிக்கெட் பரிசோதகர்

செவ்வாய், 22 நவம்பர் 2016 (16:46 IST)
செல்போனில் நகைச்சுவை வீடியோ பார்த்த பெண்ணை டிக்கெட் பரிசோதகர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


 

சென்னை ராணி மேரி கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு மாணவி ரக்சனா(வயது 19). கடந்த சில தினங்களுக்கு முன் தனது தோழிகளுடன் வில்லிவாக்கம் ரயில் நிலையத்திற்கு சென்றார். அப்போது ரக்சனா தனது தோழிகளுடன் வடிவேலு மீம்ஸ்களை பார்த்து சிரித்துள்ளனர்.  அப்போது அங்கு வந்த வசந்தா என்ற டிக்கெட் பரிசோதகர் தன்னை கேலி செய்து சிரிப்பதாக நினைத்துகொண்டு ரக்சனாவின் தலை முடியை பிடித்து தனது அறைக்கு அழைத்து சென்றார். அங்கு இருந்த சில பரிசோதர்களும் சேர்ந்து அந்த பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரக்சனாவின் பெற்றோர் தங்களது மகளை மீட்டு பெரம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவரது வலது காது கேட்கும் திறனை இழந்ததாக தெரிகிறது.  இந்த சம்பவம் குறித்து பெரம்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்