அதிமுக வேட்பாளர் பட்டியல்: 3 அமைச்சர்களுக்கு வாய்ப்பு இல்லை, ஓபிஎஸ் மகனுக்கும் சீட் இல்லை!

புதன், 10 மார்ச் 2021 (19:04 IST)
அதிமுக வேட்பாளர் பட்டியல் சற்று முன் வெளியான நிலையில் இந்த வேட்பாளர் பட்டியலில் பெரும்பாலான அமைச்சர்களுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் 3 அமைச்சர்களுக்கு மட்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது
 
அதிமுக அமைச்சர்களான வளர்மதி, பாஸ்கரன் மற்றும் நிலோஃபர் கபில் ஆகிய மூவருக்கும் இந்த தேர்தலில் சீட் இல்லை என்பது அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் ஏமாற்றம் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆனால் அதே நேரத்தில் 30 அமைச்சர்களில் 27 அமைச்சர்களுக்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் மகன் பிரதீப் குமாருக்கு பல தொகுதிகளில் விருப்பமனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவரது பெயரும் அதிமுக வேட்பாளர் பட்டியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்