தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா வர வேண்டும் என அதிமுக மூத்த நிர்வாகிகள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
திருச்சியில் 1977 முதல் 1984 வரை எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் தொடர்ந்து இரண்டு முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர். தனியார் தமிழ் வார இதழ் ஒன்றுக்கு இவர் அளித்த பேட்டியில் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதால் உடனே தமிழக அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் எனவும் மேலும் அம்மாவுக்குப் பிறகு சின்னம்மா என பதவிக்காக அமைச்சர்கள் கூவுகிறார்கள் எனவும் கூறினார் அவர்.