இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் இரவோடு இரவாக ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது. இதனையடுத்து அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற குழப்பமே தீராத நிலையில் தற்போது அதிமுக அமைச்சர் உதயகுமார் உள்ளிட்ட சிலர் சசிகலா முதல்வராக வேண்டும் என கூறுகின்றனர்.
இந்நிலையில் பன்னீர்செல்வத்துக்கு எதிராக அமைச்சர்கள் பேசுவது குறித்து காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் பேசிய போது, முதல்வராக இருக்கும் பன்னீர்செல்வத்தின் கீழ் செயல்பட விரும்பாத அமைச்சர்கள் பதவி விலக வேண்டும். அதை விட்டுவிட்டு முதல்வராக பன்னீர்செல்வம் இருக்கும் போது அவர் தற்காலிக முதல்வர், இடைக்கால முதல்வர் என்றெல்லாம் கூறக்கூடாது என்றார்.